கன மழையில் கடும் வேகம் டிவைடரில் மோதி பல்டி அடுத்து நடந்த அதிசயம்

கனமழை பெய்து இருந்த பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் சாலையிலிருந்த டிவைடர் மீது மோதி பல்டி அடித்த வீடியோவானது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.


பஞ்சாப் மாநிலத்தில் பதன்கோட் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன. வாகன ஓட்டுநர்கள் இந்த வெள்ளத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலையில் இப்பகுதியில் "ஃபோர்ட் இகோஸ்போர்ட்" நிறுவன கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காலையில் வழுக்கிய கார் டிவைடரில் மோதி 5-க்கும் மேற்பட்ட முறை பல்டி அடித்துள்ளது. சாலையோரத்தில் பயணித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் தெறித்து ஓடினர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி சென்ற நபர் எந்தவித அசம்பாவிதமும் இன்றி காரிலிருந்து எழுந்து வெளியே வந்தார். இதனை கண்ட உடன் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர் முறையாக சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் இந்த விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். மேலும் வேறு எவரும் அவருடன் வண்டியில் பயணிக்காததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. 

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் கண்ட பலரும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.