சாலை ஓரம் நின்ற லாரி.! அதிவேகத்தில் வந்து பின்னால் சொருகிய கார்! ஒரே குடும்பத்தின் 5 பேருக்கு நேர்ந்த பயங்கரம்!

சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தது நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுக்கம்பாறை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். தன்னுடைய குடும்பத்தினருடன் சிவகுமார் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுச்சத்திரம் எனுமிடத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியுள்ளது.

இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக சிவகுமார், அவருடைய மனைவியான தேவிபிரியா, தம்பதியினரின் 5 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். 

பின்னர் இறந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையோரத்தில் லாரி விதிகளுக்கு அப்பாற்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், கார் முந்தி செல்ல முயன்றதாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.