கால்வாய்க்குள் வேகமாக பாய்ந்த கார்! தண்ணீரில் தத்தளித்த 5 பேர்! உள்ளே இருந்து பறந்து வந்த குழந்தை! அதிர வைக்கும் சிசிடிவி!

விபத்தில் சிக்கி ஆற்றில் கவிழ்ந்த காரிலிருந்து 5 மாத குழந்தையை தந்தை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மீது சென்றிருந்த கார் திடீரென்று எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது. ஆட்டோவின் மீது மோதிய கார் பாலத்தின் கீழே ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் நிலை தடுமாறி விழுந்தது. ஆற்றுக்குள் விழுந்த காரில் மொத்தம் ஐந்து பேர் பயணித்து வந்துள்ளனர். அதில் ஒரு ஐந்து மாத குழந்தையும் காரில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

காரானது ஆற்றில் விழுந்தவுடன் , காரிலிருந்து வெளியே வந்த ஒரு நபர் தன்னுடைய ஐந்து மாத குழந்தையை தூக்கி வெளியே வீசுகிறார். ஆனால் அந்த குழந்தை மீண்டும் ஆற்றிலே விழுந்துவிட்டது. பின்னர் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஒன்றாக இணைந்து அந்த குழந்தையை நீரிலிருந்து மீட்டு எடுத்தனர். இதனையடுத்து காரில் இருந்த மற்ற நபர்களும் ஆற்றுநீரில் இருந்து பத்திரமாக அருகிலிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரையும் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அங்கிருந்த பொதுமக்கள் கொண்டு சேர்த்தனர். 

இந்த சம்பவம் அங்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும் இந்த விபத்து அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.