அதிவேகத்தில் சென்ற கார்..! திடீரென வெடித்த டயர்! எதிரே வந்த பஸ்..! நொடியில் நேர்ந்த கோரம்! கள்ளக்குறிச்சி பரபரப்பு!

டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்தின் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவமானது கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று சென்னையிலிருந்து சேலம் நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை பகுதிக்கு அருகே சென்றபோது திடீரென்று கார் டயர் வெடித்து போனது. தாறுமாறாக சென்றுகொண்டிருந்த கார் எதிரே வந்த பேருந்தின் மீது வேகமாக மோதி அடியில் சிக்கிக்கொண்டது.

இந்நிலையில் கயிறு மூலம் பேருந்து சாய்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரில் பயணம் செய்து உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டுபிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த நிஷா மற்றும் மல்லிகா சகோதரிகள், கார் ஓட்டுநர், 3 வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 5 வயது குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறது. இந்த சம்பவமானது உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.