கையில் துப்பாக்கியுடன் இளம் பெண்! தன் காரை தானே கொளுத்திய இளைஞன்! நடுரோட்டில் பதற வைக்கும் சம்பவம்!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில், ஒருவர் தன்னுடைய காருக்கு தானே தீ வைத்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் , திடீரென்று சுபம் சவுத்ரி என்பவர் தன்னுடைய காரை நிறுத்தி தீ வைத்துள்ளார் . அதனை அங்கிருந்த மக்கள் தடுக்க முயன்ற போது வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதற்கு பின்பு அங்கிருந்த மக்களிடம் நாட்டில் நடக்கும் ஊழல் மற்றும் பிரச்சினைகள் ஆகியவை பற்றி பேசி இருந்திருக்கிறார் சுபம் சவுத்ரி. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுபம் சவுத்ரியை கைது செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுபம் சவுத்ரியுடன் பெண் ஒருவர் இருந்திருக்கிறார். அந்தப் பெண் தன்னுடைய கையில் அனுமதி பெறப்படாத துப்பாக்கி ஒன்றை வைத்திருந்திருக்கிறார்.

இதனால் அந்தப் பெண்ணையும் போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களை கைது செய்த போலீசார் எதற்காக காருக்கு தீ வைத்தார்கள்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் சுபம் சவுத்ரி உடன் வந்த அந்த பெண் யார் என்றும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பெண் சுபம் சௌத்ரியின் மனைவியா ?அல்லது சகோதரியா ? அல்லது தொழில் பங்குதாரரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் சுபம் சகோதரிக்கும் இந்த பெண்ணிற்கும் தவறான தொடர்பு இருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் இவருக்கு கடந்த நவம்பர் மாதம் நடக்க இருந்த திருமணமும் நடைபெறாமல் போனதாக போலீசார் கூறுகின்றனர். தன்னுடைய திருமணம் நின்று போனதால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்த சுபம் சவுத்ரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.