மரத்தின் மீது கார் மோதியதில் பிரபல அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழந்திருக்கும் சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசுர வேகம்! கட்டுப்பாட்டை இழந்து சுக்கு நூறான கார்! கிடா வெட்டுக்கு சென்று திரும்பிய எம்எல்ஏ மகனுக்கு ஏற்பட்ட பயங்கரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடி எனும் பகுதியுள்ளது. இப்பகுதியில் உள்ள அலுவலக ரோட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவருடைய மகனின் பெயர் கபிலன். கபிலனின் வயது 25.
ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் திருக்கோவில் விழா நடைபெற்று வருகிறது. நேற்று கிடா வெட்டும் விழா நடத்தப்பட்டது. கவிஞன் தன்னுடைய நண்பர்களுடன் காரில் விழாவிற்கு செல்வதற்காக புறப்பட்டார். திருவிழாவை முடித்துவிட்டு அனைவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
கவிஞரின் தோழரான பிரகதீஸ்வரன் காரை ஒட்டிக்கொண்டு இருந்தார். சடையார்கோயில் - சாலியமங்கலம் பகுதியில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. பிரகதீஸ்வரன் கட்டுப்பாட்டிலிருந்து கார் விலகியது. நெடுஞ்சாலையில் வளைந்து நெளிந்து கார் சென்று கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகத்தில் மோதியது. மோதிய அதிர்ச்சியில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இடர்ப்பாடுகளில் சிக்கியவர்கள் கூச்சலிட தொடங்கினர். சத்தத்தை கேட்டு விரைந்து வந்த கிராம பொதுமக்கள் போர்க்ளேய்ன் உதவியுடன் காரில் சிக்கியவர்களை மீட்டனர். துரதிஷ்டவசமாக கபிலன், பிரகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை பொதுமக்கள் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.