ஒரே பைக்கில் மனைவி, மச்சினிச்சியுடன் ட்ரிபிள்ஸ் புறப்பட்ட இரும்பு வியாபாரி! சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்!

பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவமானது சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்காசி மாவட்டத்தில் பனவடலிசத்திரம் என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் தெற்கு பணவடலி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே தவசிகண்ணு என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகனின் பெயர் ஐயப்பன். ஐயப்பனின் வயது 34. இவரை கேரளா மாநிலத்தில் பழைய இரும்பு கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஐயப்பனின் மனைவியின் பெயர் செல்வி. ஐயப்பனின் தங்கையுடைய பெயர் ஜோதி. ஜோதியின் வயது 30. இந்நிலையில் 3 மூன்று பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பனவடலிசத்திரத்திலுள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் மூன்று பேரும் சொந்த ஊருக்கு திரும்ப வந்துள்ளனர்.

பனவடலிசத்திரம் பசும்பொன் நகர் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 3 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.விபத்து ஏற்படுத்திய காரில் சென்னையை சார்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரும் அவருடைய மனைவியும் பயணித்துள்ளனர். 

உடனடியாக உறவினர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். இறந்தவர்களின் சடலங்களை பெற்றுக்கொள்ளாமல் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், நெல்லை-சங்கரன்கோவில் பகுதியில் 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டியதை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதனால் நெல்லை சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.