நேராக வந்து மோதிய பைக்! கட்டுக்கடங்காமல் மரத்தின் மீது மோதிய கார்! வேளாங்கண்ணி சென்ற குடும்பத்துக்கு ஏற்பட்ட பெரும் துயரம்!

காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதி குட்பட்ட திருமயம் எனுமிடத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.  கூத்தங்குடி என்னும் பகுதிக்கு அருகே சென்று  கொண்டிருந்தபோது வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் வேகமாக மோதியுள்ளது.

மோதியன அதிர்ச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த நடேசன் என்பவர் தூக்கி வீசப்பட்டார். அவருடைய கால் பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்த காரணமாக சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.

மோதிய அதிர்ச்சியில் காரின் முன்புறம் பயங்கரமாக சேதமடைந்தது. காரை ஓட்டி சென்ற பாக்கியராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மகன் மற்றும் மனைவி படுகாயமடைந்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பாக்யராஜின் உடனே காரிலிருந்து மீட்பதற்கு 1 மணி நேரம் சிரமப்பட்டனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.