அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்..! நேராக பாய்ந்து மோதிய கார்! உருக்குலைந்த விபத்தில் 4 பேருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

ஆம்புலன்ஸ் மீது அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்திருப்பது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் முளுகா என்ற பகுதியிலிருந்து வாராங்கல் நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. இந்த காரானது கடாக்ஷ்பூர் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியது.

அப்போது எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் மற்றொரு கார் மீது அதி வேகமாக மோதியது. மோதி அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே வாராங்கல் நோக்கி சென்று கொண்டிருந்த காரில் பயணம் செய்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பலியான 4 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.