நேராக சென்று லாரியில் குத்திய கார்..! மோதிய வேகத்தில் சுக்கு நூறான கோரம்! துடிதுடித்து போன உயிர்..!

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவர் கோவில்களை அலங்கரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சென்னையில் தனக்கு கிடைத்த ஒரு ஆர்டரை முடித்துவிட்டு கோயம்புத்தூருக்கு  திரும்பி கொண்டிருந்தார். தன்னுடைய குழுவினருடன் காரில் முசிறிக்கு அருகேயுள்ள சிவலிங்கபுரம் என்னும் இடத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்திசையில் இருந்து வந்த லாரி மீது கார் துரதிஷ்டவசமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அழகப்பன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லாரி ஓட்டுநர் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இறந்தவர்களின் உடல்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை அதே மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.