திடீரென வெளிவந்த புகை..! அடுத்த நொடி பற்றி எரிந்த Mahindra Xylo..! உள்ளே இருந்த நான்கு பேர் கதி..? சென்னை பரபரப்பு!

சென்னை விமான நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.


சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, காரின் முன்பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனால் காரினுளிருந்த 4 பேர் அவசரமாக இறங்கி வெளியேறினர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே காரானது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. உடனடியாக கார் உரிமையாளர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துவிட்டது. எரிந்த காரானது மகிந்திரா சைலோ ரகத்தை சேர்ந்ததாகும். 

காரினுள் இருந்த பேட்டரியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். எனினும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது விமான நிலையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.