அதி வேகம்! சென்டர் மீடியனில் மோதி முன்னால் வந்த கார் மீது பாய்ந்த கோரம்! மனைவி, மகனை இழந்த பாஜக பிரமுகர்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே மாநில நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கியதில் பாஜக பிரமுகர், மனைவி மற்றும் ஒரு மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.


ஐதராபாத் அருகே மெட்சல் மாவட்டம் ஷமீர்பேட்டை என்ற பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கரீம்நகர் ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் நாகூல் பகுதி பாஜக பிரமுகர் கிஷோர் சாரி தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது.

பின்னர் எதிரே வந்த கார்மீது மோதும் மோதியதில் பாஜக பிரமுகர் கிஷோர் சாரி அவரது மனைவி மற்றும் 2வது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த முதல் மகன் மற்றும் எதிரில் காரில் வந்து விபத்தில் சிக்கிய 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளன. 

விபத்துகளை தவிர்க்கதான் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியன் எனப்படும் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி அதிவேகமாக சென்று விபத்தில் சிக்குவது மட்டுமின்றி எதிரில் வருபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.