அதிமுக - தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை! கொடுப்பதை வாங்கிக் கொள்ள கேப்டன் முடிவு!

கூட்டணி LIVE UPDATES


காலை முதல் மாலை வரை திமுக மற்றம் அதிமுகவுடன் ஒரே நேரத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் தற்போதைக்கு அதிமுக மட்டுமே தேமுதிகவிற்கு ஆபத் பாந்தவனாக உள்ளது. எனவே அதிமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொண்டு கூட்டணியில் இணைய கேப்டன் முடிவு செய்துவிட்டார்.

இதனை தொடர்ந்து சுதீஷ் மீண்டும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிமுக அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் தேமுதிகவைச் சேர்ந்த அனகை முருகேசன் இளங்கோவன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கே முழுவதும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதால் எந்த ஒரு தொகுதியும் ஒதுக்க முடியாது என துறை முருகன் கூறினார்

அதிமுகவிடம் குறைந்த தொகுதிகள் கொடுக்க  இருப்பதால் அதற்கு மாற்றாக திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எல் கே சுதீஷ் பேச்சுவார்த்தைக்காக அனகை முருகேசன் இளங்கோவனை அனுப்பி வைத்தார்

தங்களை சந்தித்தவர்கள் தொகுதி வேண்டும் என்று கோரியிருந்தனர் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட இருப்பதால் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது அதனால் ஒரு தொகுதி கூட ஒதுக்க  வாய்ப்பில்லை என  துரைமுருகன் தெரிவித்தார்

தேமுதிக அதிமுக பாஜகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தான் வருகிறது

துரைமுருகன் உடன் கூட்டணி பற்றி பேசியது உண்மைதான்

தேமுதிகாவின் சுதிஷ் பேட்டி*விழா மேடையில்  விஜயகாந்த் ஜி.கே.வாசன் படம் நீக்கம்

தேமுதிக முக்கிய பிரமுகர்கள் சிலர் தற்போது திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பேச்சுவார்த்தை.

தேமுதிகவுடன் கூட்டணி இழுபறி நீடிக்கும் நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடண்ட் ஓட்டலில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை சுதீஷ் சந்தித்தார்.

கூட்டணி தொடர்பான தனது முடிவை தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுக - தேமுதிக தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டிரைடன்ட் ஹோட்டலில் தேமுதிக அதிமுக பேச்சுவார்த்தை துவங்கியது

தற்போது டிரைடண்ட் ஹோட்டல் என தகவல்

ரேடிசன் ப்ளூ விற்கு தேமுதிக சுதீஷ் , பார்த்தசாரதி, அலகாபுரம் மோகன் சென்று கொண்டு இருக்கிறார்கள்..

ரேடிசன் ப்ளூ ஹோட்டல் அருகில் உள்ள டிரைடண்ட் ஹோட்டலில் பியூஷ் கோயல், தங்கமணி வேலுமணி உள்ளார்கள்

அதிமுக தேமுதிக கூட்டணி உறுதியாக முடிவாகும் , தேமுதிக நிர்வாகிகள்  என்னை சந்திக்க வருகிறார்கள் - ஓபிஎஸ் பேட்டி

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட தகவலுக்கு தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி என தகவல்

வேண்டாம், வேண்டாம் கூட்டணி வேண்டாம் என கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிப்பதாக தகவல்

தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் கூட்டணி ஒப்பந்தம் எங்கு கையெழுத்து இட வாய்ப்பு என்பதில் குழப்பம் நீடிக்கிறது. முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இன்னும் சற்று நேரத்தில் வண்டலூர் புறப்படவுள்ளனர். இதற்கிடையில் சுதிஷ் முதல்வரை சந்திக்கலாம் என்றும். கூறப்படுகிறது. மேலும் விமான நிலையம் செல்லும் வழியில் ரேடிசன் பூளுவில் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்பு என தகவல்

சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது..

தற்போது தேமுதிக அலுவலகத்திற்கு சுதீஷ், பார்த்தசாரதி , இளங்கோவன் , அக்பர், அலகாபுரம் மோகன், மற்றும் கட்சியின் முக்கிய நிருவாகிகள் வருகை

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் சுதீஷ் , பார்த்தசாரதி, இளங்கோவன் மற்றும் கட்சியின் முக்கிய நிருவாகிகள் வருகை..

இன்று மதியத்திற்குள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் நிலைபாட்டை அறிவிக்க உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்...

தேமுதிக - அதிமுக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டபடவில்லை. .. என தகவல்..

 தேமுதிக தரப்பில் 7 தொகுதிகள் கேட்டு உள்ளதாகவும் அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் .. என தேமுதிக வட்டாம் தகவல்

நேற்று வரை தேமுதிக கட்சி தொண்டர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற உள்ள அதிமுக கூட்டணி மாநாட்டில் தேமுதிக தலைவர் கலந்துக்கொள்ளுவார்.. என தெறிவிக்கபட்டது.  ஆனால் இன்னும் கூட்டணி உறுதியாக வில்லை.

விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று மீண்டும் ஆலோசனை  நடத்துகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலை அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா? என்பது கேள்வியாக உள்ளது