கேப்டன் மூத்த மகனுக்கு கொங்கு மண்டலத்தில் மணப்பெண்! விரைவில் கெட்டிமேளம் சத்தம்!

தேமுதிக தலைவரின் மகனான விஜய்பிரபாகரனுக்கு கொங்கு மண்டலத்தில் மணப்பெண் பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தேமுதிக கட்சியின் முப்பெரும் விழாவானது நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பிரேமலதா விஜயகாந்த் எழுச்சியுரையிற்றினார்.

அவர் கூறுகையில், "வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக வெற்றி பெற தொண்டர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். கூடிய விரைவிலேயே கேப்டன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலரும். எனது மகனுக்கு கொங்கு மண்டலத்தில் பெண் பார்த்து வருகிறோம். கூடிய விரைவில் திருமணம் நடைபெறும்" என்று உரையாற்றினார்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களால் 2 நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தது. அவர் நெடுநேரம் பேசுவார் என்று காத்திருந்த அனைவருக்கும் அது பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது. அவர் பேசியதாவது:

"உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்துக்கு விடியும். அப்போது தமிழக மக்களே தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை உங்களிடம் ஒரு மணி நேரம் பேசுவேன். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளேன். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் முதற்கண் நன்றி. அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்" என்று உரையாற்றினார்.

கேப்டனின் இந்த உரையானது அவரது தொண்டர்கள் இடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.