கேப்டனால் பேச முடியாது! மைத்துனர் சுதீஷ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! வேதனையில் தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் அந்தக் கட்சியின் மாநில துணை செயலாளருமான எல் கே சுதிஷ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியை படித்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.


காரணம் பேட்டியின்போது எல்கே சுதீசிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது கேப்டன் சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பிறகு தற்போது வரை அவர் ஒரு முறை கூட யாரிடமும் பேசுவது போன்ற வீடியோ வெளியாகவில்லை. 

கேப்டன் அமெரிக்காவில் இருக்கும் போது கூட குடியரசு தின வாழ்த்து தெரிவித்து வீடியோவை தேமுதிக வெளியிட்டிருந்தது. அப்படியிருக்க தேர்தல் சமயத்தில் தற்போது வரை விஜயகாந்த் பேசுவது போன்ற வீடியோ வெளியிடாமல் இருக்கிறதே ஏன் என்று செய்தியாளர் சுதீசிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஜயகாந்திற்கு சிகிச்சைக்குப் பிறகு பேசுவதற்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் வரை இது பற்றி வாய் திறக்காத தேமுதிக தரப்பு தற்போது தொகுதி உடன்பாடு கையெழுத்தானது இணையத்தில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் பேசமாட்டார் என்று கூறியிருந்தாலும் இப்படி ஒரு தகவல் கேப்டனின் தீவிர ரசிகர்களுக்குப் அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கும் மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது.

ஏனென்றால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமா படங்களில் நடிக்கும்போது அவரது வசனத்தை கேட்பதற்காகவே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது கேப்டனால் பேச முடியாது என்று அவருடைய மைத்துனரே கூறியிருப்பது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தான்.