கேப்டன் உடல் நிலை மோசமானது! அமெரிக்கா விரைகின்றனர் உறவினர்கள்!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை மோசமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


கடந்த ஓராண்டாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு விஜயகாந்த ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை திரும்பி வீட்டில் இருந்தபடியே அவருக்கு மியாட் மருத்துவர்களின் மேற்பார்வையில சிகிச்சை தொடர்ந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் திடீரென மீண்டும் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார்.

   சென்னையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதால் தான் அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தான் உடனடியாக கேப்டனை அமெரிக்கா அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரைதத்தாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது. இதன் காரணமாகவே கேப்டன் திடீரென ரகசியமாக அமெரிக்கா சென்றதாகவும் சொல்லப்பட்டது.

   இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் உடல் நிலை திடீரென மோசம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. சிகிச்சைக்கு அவர் உடல் உறுப்புகள் ஒத்துழைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.இதனால் கேப்டனின் உறவினர்கள் உடனடியாக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் கேப்டன் வீடு மற்றும் தே.மு.தி.க கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் நேற்று இரவு முதல் பரபரப்பாக இருக்கிறது.

   ஆனால் கேப்டன் உடல் நிலை குறித்து அவருக்கு நெருக்கமான கட்சிக்காரர்களிடம் கேட்டால் அவர் நன்றாக இருப்பதாகவும்,  கேப்டன் உடல் நிலை பற்றிய தகவல் வதந்தி என்றுமே கூறுகிறார்கள். அவர்கள் கூறும் தகவல் உண்மையாக இருந்து கேப்டன் நலமுடன் இருக்க அனைவரும் பிரார்த்திப்போம்.