இந்த நாட்கள் எப்போது முடியும்? உங்கள் தோள் மீது எப்போது விழுவது..! ஊரடங்கால் தவிக்கும் நடிகை வெளியிட்ட க்ளூ!!

நாடு முழுவதும் நடைபெற்றுவரும் ஊரடங்கு உத்தரவினால் என் கணவரை பிரிந்து வாடுவதாக பிரபல நடிகை கூறியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்தை குறைப்பதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் தன்னுடைய கணவரை மிகுந்த சிரமத்துடன் பிரிந்து வாழ்வதாக சின்னத்திரை நடிகை சரண்யா தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

இவர் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மெகா தொடர் மூலம் பிரபலமானார். தன்னுடைய தொடக்க காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் தன் திறமையினால் பல்வேறு சீரியல் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். 2015ஆம் யாழ்பானத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கை தமிழரான அமுதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அமுதன் லண்டனில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கடைபிடிக்கப்படும் உறங்கினால் அவர் அங்கேயே தங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன‌.

இந்நிலையில் கணவரை பிரிந்து வீட்டிற்குள்ளேயே வசித்துவரும் சரண்யா மனவேதனையுடன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் "இந்த நாட்கள் எப்போது முடியுமோ; மீண்டும் உங்களது தோள்கள் மீது விழ" என்று தன் கணவரது புகைப்படத்தின் கீழே பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.