வெம்பாக்கம் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துடிதுடித்த மனைவி! அலறிய குழந்தைகள்! கணவனின் அந்த பழக்கத்தால் நிர்மூலமான குடும்பம்!

வெம்பாக்கத்திற்கு அருகே பிரம்மதேசம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு இதே பகுதியை சேர்ந்த சரிதா என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சரிதாவுக்கு வயது 30. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பரசுராமனுக்கு குடிப் பழக்கம் நாளடைவில் ஏற்பட்டது. தினந்தோறும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மேலும், பலமுறை போதை தலைக்கேறி சரிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் சரிதா மனமுடைந்து காணப்பட்டார்.
வழக்கம்போல 11-ஆம் தேதி இரவன்று பரசுராமன் வீட்டிற்கு வந்து சரிதா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போதையில் சரிதாவை அடித்து காயப்படுத்தினார். கணவரின் மதுப் பழக்கத்தை தாங்க இயலாத சவிதா உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். தீக்காயங்களை தாங்க இயலாமல் சரிதா மிகவும் துடித்தார்.
இதனைக் கண்ட பரசுராமன் சரிதாவை காப்பாற்ற முயன்றார். குழந்தைகள் தாய் தந்தைக்கு நிகழ்ந்ததை பார்த்து அலறியுள்ளனர். இருவரின் உடலிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
சரிதாவின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் உயிரிழந்ததை அறிந்த சரிதாவின் தாயார் சரிதா உயிரிழந்ததற்கு வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.