கொரோனாவில் உயிரிழந்தவர்களை எப்படி மண்ணில் அடக்கம் செய்கிறார்கள் தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்குதலினால் உயிரிழப்பவர்களின் முகத்தை கூட பார்க்க இயலாத சோகம் அனைவரையும் கலங்க வைக்கிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 14,60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் முகத்தை கூட இறுதியாக பார்ப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதியில்லை. இவர்களுடைய உடல் முழுவதும் 3 அடுக்குகளாக சாதாரண துணி மூடப்பட்டிருக்கும். அந்த உடலின் மீது கிருமிநாசினி நன்றாக தெளிக்கப்பட்டிருக்கும். மயானத்திற்கு தூய்மை பணியாளர்களின் உதவியுடன் இறந்தவர்களின் உடல் கொண்டுசெல்லப்படும். தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய உடல் முழுவதையும் மூடியபடி உடைகளை அணிந்து கொள்வர். 20 அடி தொலைவில் இருந்து இறுதியான மத சடங்குகளை உறவினர்கள் செய்து கொள்ளலாம்.

மேலும், உடலை புதைப்பதற்காக 20 அடி குழி தொண்டப்பட்டிருக்கும். அந்த குறியின் வாயில் பிணத்தை வைத்து இறுதி சடங்கு செய்பவர். அதன் பின்னர் அடியில் ஒரு துணியை கட்டி, பல தூய்மைப் பணியாளர்கள் துணியை தூக்கியவாறு ஏற்கனவே தோண்டப்பட்ட குழிக்குள் உடலை போட்டு அடக்கம் செய்து விடுவர்.

அடக்கம் செய்து முடித்த பின்னர் தாங்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உடையை தூய்மை பணியாளர்கள் தீயிட்டு பொசுக்கி விடுவர். பின்னர் அவர்களுடைய உடல் முழுவதையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறுவர்.

இறந்தவரின் முகத்தை கூட கடைசியாக ஒரு முறை பார்க்கமுடியாத சோகமான நிகழ்வு  அனைவரையும் கலங்க வைக்கிறது.