கொரனா வார்டில் சேவை புரிவதால் தன்னுடைய குழந்தைக்கு பால் தருவதையே நிறுத்திவிட்டதாக செவிலியர் ஒருவர் உருக்கம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை! இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு செவிலியர்கள் வெளியிடும் அதிர்ச்சி தகவல்!

கேரளா மாநிலம் கொச்சி கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் ரீஜாஜா விஷ்ணு கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணி மிகுந்த சவால் நிறைந்ததது என தெரிவித்துள்ளார். மேலும் கொரனா வார்டில் பணிபுரிய முழு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தனக்கு 4 மணிநேரம் என வேலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனால் பாதுகாப்பு தொடர்பான உடை அணிவதற்காக ஒரு மணிநேரம் முன்னதாக மருத்துவமனை சென்றடையவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருப்பதால் அவர்கள் மனரீதியாக எந்த பயமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உளவியல் ரீதியாக அவர்கள் நிம்மதியாக இருக்க பேசிக் கொண்டே இருப்பேன் என தெரிவித்தார். ஆனால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் பாதுகாப்பு உடை அணிந்திருப்பதார்ல இயற்கை உபாதைக்கு கூட வெளியில் செல்ல முடியாது. கவச உடை மிகுந்த கனம் என்பதால் உடலில் அதிக வியர்வை வெளியேறும். ஒவ்வொரு முறை பணி முடிந்த பிறகும் குளித்துவிட்டுதான் மருத்துவமனையில் இருந்து செல்வேன் என அந்த செவிலியர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு 2 வயதில் குழந்தை இருப்பதாக தெரிவிக்கும் ரீஜாஜா விஷ்ணு கொரனா வார்டில் பணிபுரிவதால் தாய்ப்பால் கொடுப்பதையே நிறுத்திவிட்டதாக வேதனை தெரிவித்தார். இரவில் குழந்தை அழுதாலும் பாதுகாப்பு காரணமாக காரணமாகத் தாய்ப்பால் கொடுப்பதில்லை என உருக்கமாக பேசியுள்ளார் செவிலியர் ரீஜாஜா விஷ்ணு.