அந்த நடிகரை அண்ணா என்று அழைக்க மாட்டேன்..! அவர் எனக்கு வேற மாதிரி..! ஐஸ்வர்யா ராஜேஸ் ஆசை!

கோலிவுட் திரையுலகில் படத்தில் வரும் முன்னணி கதாநாயகி ஒருவர் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் புதுமுகமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்க தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடித்த "கனா" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அனைத்து தரப்பினராலும் அந்த படத்தின் வெற்றிக்கு பாராட்டப்பட்டார்.

தனக்கு கொடுக்கப்படும் எத்தகைய கதாபாத்திரமாக இருப்பினும் அதனை கச்சிதமாக நடிப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கதாநாயகர்களுக்கு தங்கை வேடத்திலும் நடித்து வருகிறார். "நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும், "வானம் கொட்டட்டும்" திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாகவும் நடித்து நன்மதிப்பை பெற்றுள்ளார்.

சமீபத்தில் இவர் பங்கேற்ற ஒரு பேட்டியில், மற்ற ஹீரோக்களுக்கும் தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், "நடிகர் விஜய் தவிர கதாநாயகர்களுக்கு தங்கையாக நடிப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் விஜயுடன் மட்டும் நிச்சயமாக கதாநாயகியாக தான் நடிக்க விருப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.