பன்னிரெண்டே நாள் தான் 5வது கணவரையும் கழட்டிவிட்ட 52 வயது ஹாட் நடிகை! பகீர் கிளப்பும் காரணம்!

கனடாவை சேர்ந்த பிரபல நடிகை பமீலா ஆண்டர்சன் திருமணம் செய்துகொண்ட 12 நாட்களில் தன் 5 வது கணவரை விட்டு பிரிந்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


நடிகை பமீலா ஆண்டர்சன் கனடா நாட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் . இவர் அந்த நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரி ஆகவும் இருந்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டுமே 12 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 முறை திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.

இந்நிலையில் நடிகை பமீலா ஆண்டர்சன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி, திரைப்பட நடிகரான ஜான் பீட்டர்ஸ் என்பவர் ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது 4 திருமணங்களை அடுத்து ஐந்தாவதாக ஒருவர் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி அனைவருமே பெரிதாக பேசினர்.

இந்த சலசலப்பு முடியும் முன்னே பமிலா ஆண்டர்சனும் ஐந்தாவது கணவரான ஜான் பீட்டர்சும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிய போவதாக தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது திருமணம் முடிந்து 12 நாட்களே ஆன நிலையில் இவர்களது பிரிவுக்கான செய்தி வெளிவந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பிரிவு செய்தியை குறித்து பமிலா ஆண்டர்சன் பிரபல செய்தி நிறுவனமான பாக்ஸ் நியூஸுக்கு தகவல் அளித்தார் மேலும் அந்த தொலைக்காட்சியின் வாயிலாக தங்கள் இருவரின் பிரிவு செய்தியையும் கூறியிருந்தார். அப்போது பேசிய அவர் அன்பு என்பது அசைக்க முடியாத ஒன்று. இது உலகளாவிய உண்மை என்று நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் ஆகையால் நாங்கள் இருவரும் பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இந்த பிரிவை சந்திக்க இருக்கிறோம் என பமீலா கூறியது குறிப்பிடத்தக்கது.