கருவில் இருக்கும்போதே திக்குவாயை கண்டறிய முடியுமா ??

இயல்பாக பேசமுடியாமல் தட்டுத்தடுமாறி, தடங்கல்களுடன் பேசுவதுதான் திக்குவாய் பிரச்னை. இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் பேர் திக்குவாய் பிரச்னையுடன் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. 80 சதவிகிதம் ஆண் பிள்ளைகளை மட்டுமே தாக்கும் இந்த திக்குவாய் குறைபாட்டை கருவில் இருக்கும்போது ஸ்கேன் மூலம் கண்டறியமுடியுமா என்று பலர் சந்தேகம் கேட்பதுண்டு.


·         திக்குவாய் என்பது நோய் அல்ல. மனம் தொடர்பான ஒரு பிரச்னை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

·         தொண்டை, வாய், நாக்கு போன்ற அவயங்களில் எந்தக் குறை இல்லாதவர்களுக்கும் திக்குவாய் பிரச்னை ஏற்படலாம்.

·         பேசும்போது மட்டுமே திக்குபவர்களுக்கு, தனியே பாடும்போதும் பேசும்போதும் தடங்கல் இருப்பதில்லை.

·         குழந்தைகளை அடக்கி வளர்ப்பதும், பேசாதே என்று கண்டித்து வளர்ப்பதும் திக்குவாய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

திக்குவாய் உடல் குறைபாடு அல்ல என்பதால் ஸ்கேன் மூலம் அல்லது பரிசோதனை மூலம் குழந்தைக்கு எதிர்காலத்தில் திக்குவாய் ஏற்படுமா என்பதை கண்டறிய முடியாது. பொதுவாக ஐந்து வயதுக்குப் பிறகே இந்த பிரச்னை இருப்பது தெரியவருகிறது என்றாலும் சின்ன வயதில் முறையான பயிற்சி கொடுப்பதன் மூலம் இதனை தவிர்க்கமுடியும்.