தனது விலை உயர்ந்த பைக்கை நடுரோட்டில் வைத்து அடித்து நொறுக்கிய இளைஞன்! அதிர்ச்சி காரணம்!

இளைஞரொருவர் இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் உடைத்த சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல், புதிய வாகன மசோதா நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவன் காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் சிக்குவோரிடம் கடுமையான அபராதம் விதிக்கின்றனர். அதன்படி உத்திரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அவரை பிடித்த காவல்துறையினர் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளனர். இதனால் அவர் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தை தள்ளிவிட்டு அதனை அடித்து உதைக்க முயன்றுள்ளார்.

அதன் பின்னர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு அழ தொடங்கியுள்ளார். 

இந்த சம்பவமானது பொதுமக்களை தெரிந்தும் கலங்க செய்தது.