என்னை நீங்க தான் அம்மா ஆக்கனும்! கிரிக்கெட் வீரரிடம் கெஞ்சிய இளம் பெண்! பிறகு அரங்கேறிய சுவாரஸ்யம்!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான ஜிம்மி நீஷமிடம் பாகிஸ்தான் ஊடகவியலாளர் ட்விட்டரில் வரம்பு மீறி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விளையாட்டு வீரர்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் கேட்கப்படுவது வழக்கமாகும். சிலர் அதற்கு சாமர்த்தியமாக பதில் அளிப்பதும், வேறு சிலர் அதனை ஒதுக்கிவிடுவதும் என வாழ்ந்து வருகின்றனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டராக ஜிம்மி நீஷம் விளையாடி வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு உடையவர். இவரிடம் பாகிஸ்தான் நாட்டின் நடிகையான ஷென்வாரி முகம் சுளிக்கும் வகையில் டுவிட்டரில் பேசியுள்ளார். அதாவது "என்னுடைய வருங்கால குழந்தைகளுக்கு அப்பாவாக தங்களால் இருக்க முடியுமா" என்று பதிவு செய்திருந்தார். அத்துடன் கிண்டல் செய்யும் வகையில் சில ஸ்மைலிகளையும் அனுப்பியிருந்தார்.

இதற்கு உடனடியாக ஜிம்மி நீஷம் பதிலளித்தார். அதாவது "நீங்கள் அனுப்பிய ஸ்மைலிகள் தேவையற்றவை என்று நினைக்கிறேன்" என்று பதிவு செய்திருந்தார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நெட்டிசன்கள் பாகிஸ்தான் நடிகை ஷென்வாரியை சரமாரியாக கலாய்த்துள்ளனர்.