தனியே இருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா?

கண்டிப்பாக முடியும். நெஞ்சுப் பகுதியில் ஏதேனும் அசெளகரியமாக தோன்றினால் முதலில் மாரடைப்பு அறிகுறியா என்பதை அறியவேண்டும். அதாவது மாரடைப்பு என்றால் லேசாக வியர்வை இருக்கும். இடது கை விரல்களில் இருந்து முதுகு வரையிலும் வலி பரவும்.


நெஞ்சு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதாகத் தெரியும். இப்படி ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் முதலில் வசதியாக படுத்துக் கொள்ளவும். படுக்கைக்கு அருகில் எப்போதும் ஒரு ஆஸ்பிரின் மாத்திரை வைத்திருக்கவும். அந்த ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்து  நாக்கின் அடியில்  மாத்திரையை வைத்துக்கொள்ளவும்

இதன் மூலம் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். வலி குறைந்தவுடன் சரியாகிவிட்டது என்று அசட்டையாக இருக்கக்கூடாது. உடனே அருகிலுள்ள  மருத்துவரிடம்  தாமதிக்காமல் செல்ல வேண்டும். உதவிக்கு யாராவது வரட்டும் என்று காத்திருப்பது அல்லது ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து டென்ஷன் ஆவது போன்ற எதையும் செய்ய வேண்டாம். நீங்களே மருத்துவமனைக்கு சென்று உடனடியாக மருத்துவரை சந்தித்தால் போதும். நிச்சயம் மாரடைப்பில் இருந்து தப்பிவிட முடியும்.

இதயவலி ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவரை சந்தித்தால் நிச்சயம் உயிர் பிழைக்க முடியும். அதனால் அந்த கோல்டன் நேரத்தை தவற விடாதீர்கள்.