சிறுநீர்த் தொற்று வராமல் கர்ப்பிணியைக் காப்பாற்ற முடியுமா?

கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் சிறுநீர்த்தொற்று பெரும் தொந்தரவான பிரச்னையாகத்தான் இருக்கிறது. சிறுநீர்த்தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.


·         தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். பாத்ரூம் செல்லும் அவசரம் நேரும்போது எந்த்க் காரணத்துக்காகவும் தள்ளிப்போடக் கூடாது.

·         பாத்ரூம் செல்லும்போது முழுமையாக கழித்துவிட்டுத்தான் வரவேண்டும். அவசரமாக பாதியில் நிறுத்தக்கூடாது.

·         பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு அந்தரங்க பகுதியை மிகவும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

·         சுகாதாரமான தண்ணீர் மற்றும் மென்மையான சோப் உபயோகித்து உறுப்புகளை சுத்தப்படுத்த வேண்டும்.

உறவுக்குப் பின்னரும் அந்தரங்க உறுப்புகளை நல்ல முறையில் கழுவ வேண்டும். இந்தப் பாகங்களில் வாசனை திரவியங்கள், பவுடர், நறுமணப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கர்ப்பம் உறுதியானதில் இருந்து சீராக சிறுநீர் பரிசோதனை செய்துவந்தால், ஆரம்ப கட்டத்திலேயே சிறுநீர்த் தொற்றை கண்டறிந்து எளிதில் குணமடைய முடியும்.