வெள்ளிக்கிழமை வெளிநபர்களுக்கு பணம் கொடுக்க கூடாது! ஏன் தெரியுமா?

செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.


நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன் அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள். இந்த காரணத்தினால் தான் அன்றைய தினம் பணம் கொடுப்பதையும், செலவு செய்வதையும் தவிர்க்கிறார்கள். இல்லையெனில் நம்மிடம் இருக்கும் அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடுமோ என்ற அச்சம் இருப்பது இயற்கை தான். அதனால் ஏற்பட்டது தான் இந்த பழக்கம்.

வெள்ளிக்கிழமைகளில்  பிறருக்கு பணம் மற்றும் பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாம். கொடுத்த பின்பு அவரிடம் இருந்து சிறு தொகையை பெற்று கொள்ளவும்மேலும், ஆலய தரிசனம், அன்னதான சேவை, தர்ம முதலாகிய புண்ணிய காரியங்களுக்கு பணம் தரலாம். ஆனால் தனிநபர் அல்லது வியாபாரம் செய்ய கடன் கேட்போருக்கு மட்டும் தரக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பெண்கள் மங்கலப் பொருள்களை கண்களால் காண வேண்டும் என்று ஒரு சாஸ்திரம் உண்டு அதாவது மஞ்சள், சந்தனம், தாம்பூலம், சங்கு, கைமணி, மரச்சிற்பம் உள்ளிட்டவை அந்த மங்களப் பொருட்கள்.

உயிருக்கு ஆபத்து என்று வரும் போது உடனடியாக காப்பாற்றப்பட வேண்டியது உயிரே தவிர, மற்றவைகள் அல்ல. எனவே ஆபத்து, அவசரம் என்றால் வெள்ளிக்கிழமை என்றாலும், அர்த்தஜாமம் என்றாலும், பணம் கொடுக்கலாம் இதில் சாஸ்திர தடையில்லை.