இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் இயக்கங்களை பெருமைப்படுத்தும் விதமாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "walking with comrades" என்ற புத்தகத்தின் பகுதிகளை கல்லூரி மாணவர்கள் படிக்க கூடாது என்பதற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பிச்சு மணி இதை செய்துள்ளார்.
தி.மு.க.வின் இரட்டை வேடம் எப்போது முடிவுக்கு வரும்..? பத்திரிகை அலுவலகத்தை எரித்தவர்கள் கருத்து சுதந்திரம் குறித்துப் பேசலாமா?

ஆனால், இந்த விவகாரத்திற்காக தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அப்படி என்றால், தடை செய்யப்பட்ட இயக்கங்களான மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் இயக்கங்களின் கொள்கைகளை திமுக ஆதரிக்கிறதா?
மாவோயிஸ்டுகள்/ நக்ஸல்களுக்கு எதிரான இந்த யுத்ததில் பல நூற்றுக்கணக்கான துணை ராணுவத்தினரும் தங்களின் உயிர்களை பலி கொடுத்தனர். அந்த CRPF படைகளில் பல்வேறு தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் உயிரிழந்தனர். அப்போது எங்கே சென்றது இந்த திமுக?
சமீபத்தில் கேரளாவின் வயநாடு பகுதியில் கேரள அரசு படைகள் சில மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றனர். கேரளாவை ஆண்டு கொண்டிருக்கும் இடதுசாரி அரசுடன் மத்தி மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் இருக்கும் திமுக அவர்களிடம் "எதற்காக மாவோயிஸ்டுகளை சுட்டு கொன்றீர்கள்" என கேள்வி கேட்க தயாரா?
இதற்கு தயாராக இல்லாத தி.மு.க.தான், பா.ஜ.க.வுக்கு அடிபணிந்து, இந்த செயலை செய்திருப்பதாக கொந்தளிக்கிறது. கருத்து சுதந்திரம் இல்லையா என்று கேள்வி கேட்கிறது. ஒரே ஒரு சர்வே வெளியிட்டதற்காக பத்திரிகை அலுவலகத்தை எரித்தவர்கள், இப்படி பேசுவதுதான் எத்தனை பெரிய இரட்டை வேடம்…? இவர்கள் வேஷம் எப்போது கலையுமோ?