பக்கத்து வீட்டுக்காரரின் ஆசை வார்த்தை! கள்ளக் காதல்! கொடூர கொலை! திருச்சி ஜெயசுதா கொலைகாரியானது எப்படி?

காரை திருடி பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தையால் கால் டாக்ஸி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையிலுள்ள அசோக்நகரில் நாகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் கால்டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 6-ஆம் தேதி அன்று ஒரு குழுவானது குற்றாலத்திற்கு செல்வதற்காக நாகநாதனின் காரை வாடகைக்கு எடுத்தது.

8-ஆம் தேதி இரவன்று நாகநாதன் தன்னுடைய முதலாளிக்கு கால் செய்து நாளை இரவு திரும்பி விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. உடனடியாக கால் டாக்ஸி உரிமையாளர் நாகநாதனின் மொபைலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய மொபைல் போன் "ஸ்விட்ச் ஆஃப்" செய்யப்பட்டிருந்ததால் கால்டாக்ஸி உரிமையாளர் அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே நாகநாதனின் சடலத்தை காவல்துறையினர் மீட்டெடுத்தனர். காரை வாடகைக்கு எடுத்த கும்பல் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரை திருடிச்சென்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

காரை திருடிய கும்பல் உறையூரில் காரை புதிதாக பெயிண்ட் செய்வதற்காகவும், நம்பர் பிளேட் மாற்றுவதற்காகவும் சென்றுள்ளனர். அப்போது பெயிண்டருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் காவல்நிலையத்தில் தகவல் அளித்தார்.

பின்னர் காவல்துறையினர் வலைவீசி தேடி மர்ம கும்பலை கண்டறிந்தனர். ஜெயசுதா, அவருடைய காதலனான ஹரிஹரன், ஜெகதீஷ், ஃபெரோஸ் அஹ்மத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது ஜெயசுதாவின் அக்கம்பக்கத்தினருள் ஒருவரான ஃபெரோஸ் அஹ்மத் பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியவர் ஆவார். அதர் ஜெயசுதாவிடம் காரை திருடி விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதில் மயங்கிய ஜெயசுதா தன்னுடைய காதலனான ஹரிஹரன் மற்றும் தன்னுடன் வேலை பார்த்து வந்த ஜெகதீஷ் ஆகியோரை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் 4 பேரும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.