நட்ட நடு வானம்! பல்லாயிரம் அடி உயரம்! விமானத்தின் கதவை திறந்து குதித்த இளம் பெண்! பதற வைத்த சம்பவம்!

பறந்து கொண்டிருக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து பல்கலைக்கழக மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் உலகெங்கும் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அலனா கட்லேண்ட் என்ற மாணவி படித்து வருகிறார். இவருடைய வயது 19. இவர் உலகில் காணப்படும் அரியவகை நண்டுகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் படிப்பினை படித்து வருகிறார்.  இந்த ஆராய்ச்சியை பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்காக தன் சக தோழியுடன் குட்டி விமானம் ஒன்றில் மடகாஸ்கர் நாட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது யாரும் எதிர்பாராதவாறு விமானத்தின் கதவினை உடைத்து கொண்டு 3600 அடி உயரத்திலிருந்து அலனா கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சக பயணிகளின் முயற்சியை முறியடித்து விமான கதவை உடைத்து அவர் கீழே குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட பகுதியானது மாமிச உணவுகளை உண்ணும் ஃபோஸா பூனைகள் வாழுமிடமாகும். புதர் மண்டிய காட்டுப்பகுதியில் அவர் குதித்துள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சம்பவம் அறிந்த மாணவியின் பெற்றோர் மடகாஸ்கருக்கு விரைந்து சென்று விசாரித்துள்ளனர். பின்னர் உடல் கிடைக்காமலேயே தங்கள் மகளுக்கு மடகாஸ்கரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அலனா ஏற்கனவே 5 முறை சித்தப்பிரமைக்கு உள்ளாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது மடகாஸ்கர் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.