கரை ஒதுங்கியது காஃபி டே ஓனர் சித்தார்த்தா உடல்! அதிர்ச்சியில் கர்நாடகா!

தலைமறைவாகி இருந்த கேஃப் காஃபி டே அதிபர் சித்தார்த்தாவின் உடலை நேத்ராவதி ஆற்றிலிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேஃப் காஃபி டேயின் நிறுவனர்  வி.ஜி.சித்தார்த். இந்த நிறுவனம்தான் சென்னையில் இயங்கிவரும் காஃபி நிறுவனங்களில் பெரிதாகும். இவர் முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனாவார். அவருக்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திடீரென்று ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமாகியுள்ளார். தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் "37 ஆண்டுகளாக சிரமப்பட்டு கிட்டத்தட்ட 30,000 பணிகளில் உருவாக்கினேன். கணிப்பொறி நிறுவனத்திலும் கிட்டத்தட்ட 20,000 பணிகளை உருவாக்கிய நான் இன்று தோற்றுப்போய் விட்டேன். என்னுடைய முயற்சிகள் சரியாக இருப்பினும் நினைத்த அளவிற்கு என்னால் தொழிலில் லாபத்தை ஈட்ட இயலவில்லை. என் மீது நம்பிக்கை வைத்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதற்குமேல் என்னால் கஷ்டத்தை அனுபவிக்க இயலவில்லை. நான்கு புறங்களிலிருந்தும் கஷ்டத்தால் சூழ்ந்த நான் இன்று போராடுவதை நிறுத்திவிட்டேன். என்னை வருமானவரித் துறையை சேர்ந்த சிலர் என்னை மனதளவில் மிகவும் துன்புறுத்தினர். நான் செய்த ஒவ்வொரு வியாபாரத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பாளர். என்னுடைய ஆடிட்டர்களும், ஊழியர்களும், குடும்பத்தினரும் அதில் சம்பந்தப்பட மாட்டார்கள்.

அனைத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பு. என்னுடைய சொத்துக்களின் விவரங்களை குறிப்பிட்டு உள்ளேன். அதிலிருந்து அனைவருக்கும் பணத்தை திருப்பி செலுத்துங்கள். ஒவ்வொரு ஊழியரும் மிகவும் கடுமையாக போராட வேண்டிய காலம் இது. நான் யாரையும் ஏமாற்றும் விதத்தில் எந்த பணியையும் செய்யவில்லை" என்று மனமுருக எழுதியிருந்தார்.

நேத்ராவதி ஆற்றில் காலத்தில் சென்று கொண்டிருந்த போது தன் ஒட்டுநரை காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். நெடுநேரமாகியும் அவர் வராததால் சந்தேகித்த ஓட்டுநர் சித்தார்தாவின் குடும்பத்திடம் தகவலை தெரிவித்தார். அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இந்த கடிதத்தை பெற்ற காவல்துறையினர் சித்தார்த்தாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது இந்தியாவின் தொழில் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று காலையில் இருந்தே காவல்துறையினர் நேத்ராவதி ஆற்றுப்பகுதியில் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை நேத்ராவதி ஆற்றில் அவருடைய உடலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அவரது நிறுவனத்தில் உள்ளவர்களை மட்டுமில்லாமல் தொழில்துறை சார்ந்த அனைவரையும் பெரிதாக பாதித்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட சித்தார்தாவுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகவும், வருமான வரித்துறை நெருக்கியதும், நண்பர்களின் துரோகமும்தான் தற்கொலைக்குத் தூண்டியதாக நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.