233 கூட்டங்களில் பங்கேற்றவர்! திமுகவின் 60 ஆண்டு கால அடிமட்ட தொண்டன்! ஆனால் அண்ணா அறிவாலயத்தில் நேர்ந்த பரிதாபம்!

திமுக தொண்டரொருவர் அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் செந்துறை என்னும் பகுதி அமைந்துள்ளது. செந்துறைக்கு உட்பட்ட சிறுகடம்பூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் ஒரு பூ வியாபாரி. திமுக மீதும், மறைந்த தலைவர் கலைஞர் மீதும், தளபதி மீதும் அதீத பற்றுக்கொண்ட தொண்டர்களுள் இவரும் ஒருவர். 

அதற்கு எடுத்துக்காட்டாக, முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது நடுரோட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு ஓடிய முதல் நபராக திகழ்ந்தவர் மணி. திமுக பொதுக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு கலைஞரின் பேச்சு வியந்து கேட்பார். கலைஞர் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் தன் பெயருடன் "கலைஞர்" என்பதை இணைத்து கொண்டார்.

அவருடைய வாழ்நாள் லட்சியமாக இருந்தது தலைவர் கலைஞருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் அது நிறைவேறாமல் போனது. இதுவரை 233 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தன் வியாபாரத்தை சம்பாதிக்கும் பணத்தை உபயோகித்து திமுக பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வார்.

கலைஞர் இறந்த பிறகு தலைவராக பொறுப்பேற்ற தளபதியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டவர். ஆனால் இவருக்கு அறிவாலயத்திற்குள் நுழைய இதுவரை வாய்ப்பு கிடைத்ததில்லை. 1960 முதல் தீவிர திமுக தொண்டராக இவர் இருந்து வருகிறார். சுமார் 60 வருடங்களாக உழைத்தும் தற்போது வரை ஒரு முறை வட இவரால் அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைய முடியவில்லையாம்.

மணி அவர்கள் கூறுகையில், "கலைஞருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் தளபதியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது நடக்காமல் போனாலும் பரவாயில்லை. நான் கடைசிவரை தி.மு.கழகத்தின் கொடியை பிடித்தே உயிரைவிடுவேன்" என்று கூறினார்.

இந்த செய்தியின் மூலம் தளபதி அவர்கள் மணியை அறிவாலயத்திற்குள் உள்ளே நுழைய அனுமதித்தால் நன்றாக இருக்கும்.