பேசேஞ்சர் சூட்கேஸை உடைத்த வாடகை கார் டிரைவர்! கையும் களவுமாக சிக்கிய வைரல் வீடியோ!

சென்னை சில்க்ஸ் பார்க்கிங் வளாகத்தில் கார் ஓட்டுநர் பயணித்தவர்களின் பையிலிருந்து திருட முயன்ற சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை தியாகராய நகர் பகுதியில் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை இயங்கி வருகிறது. நேற்று காலை இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஜவுளிகளை வாங்குவதற்காக வந்துள்ளார். 

வாடகை காரின் மூலம் அவர் கடைக்கு வந்தார். கடையின் பார்க்கிங்கில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது யாரும் இல்லாத நேரத்தில் கார் ஓட்டுநர் தன்னுடைய காரில் வந்தவரின் பையிலிருந்து திருட முயற்சித்தார்.

ஓட்டுநர் எதிர்பாராதபோது காரில் பயணம் செய்தவர் வந்துவிட்டார். ஓட்டுநரை சரமாரியாக அவர் வெளுத்து வாங்கினார். உடனடியாக காவல்துறையினரை அழைக்குமாறு கத்தி கூச்சலிட்டார். அருகிலிருந்தோர் வந்து நடந்தவற்றை கேட்டறிந்தனர். 

இந்த சம்பவமானது சென்னை சில்க்ஸ் பார்க்கிங் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற வாடகை கார்களில் பயணம் செய்பவர்கள் வாகனத்தில் முக்கியமான பொருட்களை வைக்காமல் இருப்பது நல்லதாகும்.