எப்பவும் நாங்க தான் நம்பர் 1 ! டெல்லி அணியை தெறிக்க விட்டு நிரூபித்த CSK! தோனி, தாஹிர் வேற லெவல்!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதல் 10 ஓவர்களுக்கு சென்னை அணி 53 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களுக்கு சென்னை அணி 126 ரன்களை குவித்து 20 ஓவர்களுக்கு 179 ரன்களை எடுத்தது.

சின்ன தல ரெய்னா சிறப்பாக விளையாடி 59 ரன்களை விளாசினார். பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 10 பந்துகளுக்கு 25 ரன்களை அதிரடியாக அடித்து எதிரணியை மிரட்டினார். 16 ஓவர் வரை பொறுமையாக ஆடிய தோனி கடைசி 4 ஓவர்களில் விஸ்வரூபம் எடுத்தார். இவர் 22 பந்துகளில் 44 ரன்களை விளாசி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.இதனால் அந்த அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணியின் சார்பில் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் 44 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.