சன் ரைசர்ஸ் அணியை தெறிக்க விட்ட வாட்சன்! மீண்டும் CSK நம்பர் 1 !

சன் ரைசர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய மனிஷ் பாண்டே , டேவிட் வார்னர் வுடன் இனைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இவர்கள் இருவருக்கும் எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் சென்னை அணியினர் திணறினர். சிறப்பாக ஆடிய வார்னர் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்பு களமிறங்கிய விஜய் ஷங்கர் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.சென்னை அணியின் சார்பாக ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளெஸ்ஸிஸ் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும் பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா , வாட்சன் ஜோடி சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து விளாசியது. சிறப்பாக ஆடிய  சுரேஷ் ரெய்னா ரஷீத் கான் பந்தில்  38 ரன்களுக்கு வெளியேறினார்.வாட்சன் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 96 ரன்களை குவித்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.இதனால் சென்னை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.