சென்னை அணியை அலறவைத்த மும்பை இந்தியன்ஸ்! சூழலில் மிரட்டுவாரா தாஹிர்?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கு அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய ரெய்னாவும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்னை அணிக்கு அதிர்ச்சியான துவக்கம் தந்தனர். இவராவது அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாட்சனும்  10 ரன்களுக்கு அவுட் ஆகி சென்னை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின்னர் களமிறங்கிய முரளி விஜய் மற்றும் ராயுடு பொறுமையாக ரன்களை சேர்த்தனர். விஜய் 26 ரங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய தோனி ராயுடுவுடன் இணைந்தார். இந்த ஜோடி சற்று வேகமாக ரன்களை சேர்த்தனர். எனினும் சென்னை அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. டோனி அவுட் ஆகாமல் 37 ரன்களும், ராயுடு அவுட் ஆகாமல் 42 ரன்களும் எடுத்தனர்.மும்பை அணியின் ராகுல் சஹர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெய்ட்களை வீழ்த்தினார்.