தோனிக்கு தில்ல பாத்தியா! மூன்றே 3 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கிய CSK!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதல் ipl போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்து ,ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.


இந்த போட்டியில் சுவாரஸ்யம் என்னவென்றால் IPL போட்டிகளில் பதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை களம் இறக்கலாம். இதனால் ipl இல் விளையாடும் அணைத்து அணிகளும் இந்த விதியை பயன்படுத்தி 4 வெளிநாட்டு வீரர்களை இருக்குவார்கள்.

அனால் இன்றைய போட்டியில் தல டோனி வித்தியாசமாக 3 வெளிநாட்டு வீரர்களை  தேர்வு செய்து களம்  இறக்கியுள்ளார். இதன் படி சென்னை அணியில் ஷான் வாட்சன் , பிராவோஇம்ரான் தாஹிர்  அகிய 3 வீரர்கள் மட்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

டோனி  வெளிநாட்டு வீரர்களை தேர்வு  செய்வதை காட்டிலும்  அணிக்கு தேவையான வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார் என்பது தெரிகிறது. புதிதாக யோசிப்பதிலும் தில்லாக முடிவு  எடுப்பதிலும் தோனிக்கு நிகர் தோணியே.