தோற்றாலும் சென்னை தான் நம்பர் 1 ! பிலே ஆஃப் சுற்றில் சொந்த மண்ணில் விளையாட போகும் சென்னை அணி !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி 96 ரன்களை எடுத்தார்.சுரேஷ் ரெய்னா 53 ரன்களை விளாசினார். கிங்ஸ் XI பஞ்சாப் அணி சார்பில் சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் தொடக்கம் முதலே பின்னி பெடலெடுத்தார். இவர் சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களை விளாசி கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். பூரான் சிறப்பாக விளையாடி 36 ரன்களை சேர்த்தார்.இதனை கிங்ஸ் XI பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் XI பஞ்சாப்  அணி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் நெட் ரன் ரேட் குறைவாக உள்ளதால் கிங்ஸ் XI பஞ்சாப் அணியால் பிலே  ஆஃப் சுற்றுக்கு முன்னேற இயலவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் முதலிடத்தில் உள்ளது. மும்பை இன்று நடக்க விருக்கும் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட சென்னை அணி 2 வது இடத்திற்கு தான் தள்ளி போகும். ஆகவே சென்னை அணி குவாலிபயர் 1ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுவது உறுதி ஆக உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் சென்னை அணி மும்பை அணியுடன் குவாலிபயர் 1ல் மோதும். மும்பை அணி தோற்றுவிட்டால் டெல்லி அணியுடன் சென்னை அணி குவாலிபயர் 1ல் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.