எப்பவுமே நாங்க தான் நம்பர் 1 ! KKR அணியை பந்தாடி நிரூபித்த CSK!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். அண்ட்ரெ ரஸ்ஸல் மட்டும் நிதானமாக விளையாடி 50 ரன்களை  எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங்க் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். 

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில்  3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எளிதாக எட்டியது. சென்னை அணியின் டு பிளெஸ்ஸிஸ் அவுட் ஆகாமல் 43 ரன்களை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். சிறப்பாக பந்து வீசிய சஹர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.