தாக்குதலில் பலியான வீரரின் மகனை காப்பாற்றி கண் கலங்கியபடி ஓடிய சீனியர் போலீஸ்! உருக வைக்கும் சம்பவம்!

ஜம்மு காஷ்மீர் பகுதியான அனந்த்நாகில் நடந்த டெரர் அட்டாக்கில் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அர்ஷத் கான் என்பவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் உயரிய பதவி வகிப்பவர். இவர்  ஸ்ரீநகர் பகுதியில் காவலராக  பணிபுரிந்து வருகிறார். அனந்த்நாக் பகுதியில் சென்ற வாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் தாக்குதல் நடைபெற்றது.

அப்போது போர் தாக்குதலில் அர்ஷத் கான் அடிபட்டு கிடந்தார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று இறந்துள்ளார். இவருக்கு பெற்றோர்கள், இளைய சகோதரன் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனியர் காவல்துறை அதிகாரியான ஹசீப் முகல் என்பவர், அர்ஷத் கானின் குழந்தையான உஹ்பானை கண்கலங்கி தூக்கி செல்லும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தை அர்ஷத்தின் இறுதி சடங்கின் போது எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய படையினர் 2 தீவிரவாதிகளுள் ஒருவரை கொன்றுள்ளனர். இந்த சம்பவமானது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.