அம்பானி வீட்டில் பாதுகாப்பு அதிகாரி மரணம்..! தற்கொலையா... கொலையா?

இந்தியாவின் முதன்மை கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி வீட்டில் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, இந்திய நாட்டின் முதன்மை பணக்காரராவார். இவரின் வீடானது தெற்கு மும்பையிலுள்ள அண்டிலாவில் அமைந்துள்ளது. 

இவருடைய வீட்டில் எப்போதும் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். புதன்கிழமையன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர் ஒருவர் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பல மணி நேரத்திற்கு இதுகுறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை.

பின்னர் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பிற வீரர்கள், மும்பை மாநகர காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பாதுகாப்பு அதிகாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக டவுன்டவுன் ஜே.ஜே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தற்கொலையானது அண்டிலாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.