சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் கடலுக்கடியில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரது மகள் அவருக்கு சல்யூட் அடித்து வீரவணக்கம் செய்தது காண்போரை மனமுருக செய்தது.
கண்களில் கண்ணீர்! உடைந்த குரல்! தந்தை உடலுக்கு கம்பீர வீர வணக்கம்! நெகிழ வைத்த மகள் ஸ்ரீதன்யா!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அந்தமான் பகுதியில் சிஆர்பிஎஃப் படை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ பணிச் சுமையை குறைப்பதற்காக தனது நண்பர்களுடன் கடலுக்கு குளிக்க சென்று மகிழ்ந்து விளையாடுவது உண்டு.
அந்த வகையில் இம்முறை கடலுக்கு குளிக்க சென்று மகிழ்ந்து விளையாடியுள்ளார். அப்பொழுது ராட்சச அலை அடித்ததன் காரணமாக கடலுக்குள் சிக்கிக்கொண்டார் செந்தில்குமார். பின் மேலே வரமுடியாமல் தவித்த அவர் மூச்சு திணறி கடலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.
நண்பர்களால் மீட்க்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. குடும்பமே சோகத்தில் இருக்கும் நிலையில் அவரது 14 வயது மகள் ஸ்ரீதன்யா தந்தைக்கு சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்தினார். இது அங்கிருந்தோரின் மனதை உருக செய்துள்ளது.
சொந்த ஊரான வாணியம்பாடியில் செந்திலின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது தனது தந்தையை பார்த்து மகள் ஸ்ரீதன்யா பரேட் சல்யூட் என்று கூறியபடி உடைந்த குரலுடன் சல்யூட் அடித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.