வருங்கால நம்பிக்கை நட்சத்திரமான மாணவ செல்வங்களே..மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொள்ளுங்கள்! முதல்வர் எடப்பாடி உருக்கம்!

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் இழப்பு , தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டர் மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.


’நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மாநில அரசு சார்பில் முறையிட்ட பின்னரும், மத்திய அரசு நாடு முழுவதும் நாளை நீட் நுழைவு தேர்வை நடத்துகிறது. நடக்குமா நடக்காதா என்ற தயக்கத்தில் இருந்த மாணவர்கள் பலருக்கும் நீட் தேர்வு அச்சத்தைக் கொடுத்துள்ளது. 

இந்த சூழலில், நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா என்ற மாணவி மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு ட்விட்டர் மூலம் அஞ்சலி தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அவர் தனது ட்விட்டரில், ‘’வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவச் செல்வங்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது. மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்’’

நீட் தேர்வுக்கான மரணம் இதுவே கடையாக இருக்கட்டும்.