பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்! பெண் இன்ஸ்பெக்டர் மீது பகீர் புகார்!

சிபிசிஐடி பெண் ஆய்வாளர் ஒருவர் தன் மகளை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தி வருவதாக போலீஸ் நிலையத்தில் திடுக்கிடும் புகாரளித்துள்ளார். மேலும் தன்னை பெற்றோர்கள் துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


சிபிசிஐடி பெண் ஆய்வாளராக விஜயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரின் மகளின் பெயர் கேண்டி என்பதாகும். விஜயலட்சுமியும் அவளது கணவரும் தங்கள் மகள் கேண்டியை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர்.

கேண்டியை அவர்கள் துபாயில் உள்ள ஒரு பாரில் அடைத்து வைத்து ஒரு வருடமாக பணம் சம்பாதித்து வந்தனர். மனதளவிலும் உடலளவிலும் உடைந்த கேண்டி அங்கிருந்து தப்பித்தார். உடனே தன் அண்ணனின் வீட்டிற்கு சென்று அடைக்கலமானார்.

கேண்டியை தேடிக்கொண்டிருந்த அவளது பெற்றோர்கள், இந்த செய்தியை அறிந்து அங்கு அடியாட்களுடன் சென்று ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர். கேண்டியை அடித்து உதைத்து வெளியே தூக்கி வந்த போது பொதுமக்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதற்கு எந்தப் பயனும் இல்லாததால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

கேண்டியின் அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சிப்பதாகவும், தன் அண்ணியிடம் இருந்து 10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக கூறினார். தன் தாயார் காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதால் யாரும் நான் அளிக்கும் புகார்களை கண்டுக்கொள்வதில்லை எனவும் கூறினார்.

இந்த நிகழ்வு காவலர்களிடம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எவ்வாறு இந்த விவகாரத்தில் காவல் துறையினர் செயல்படப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.