குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது.. பிரதமர் மோடி அதிரடி..!

குடியுரிமை சட்ட திருத்தம் என்பது நாட்டு நலனுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அதிலிருந்து ஒருபோதும் தங்களால் பின்வாங்க இயலாது என்றும் பாரதப் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரநாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும். தொகுதிக்கு சென்று அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பேசியவர் நாட்டில் நிலவும் பல நெருக்கடிகளை பற்றியும் சட்ட திருத்தங்கள் பற்றியும் கருத்துகளை பதிவு செய்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் அதில் இருந்து தங்களால் பின் வாங்க இயலாது எனவும் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் நாட்டு மக்களின் நலனுக்காகவே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது எனவும் அவர் கூறியிருக்கிறார். ஆகையால் தான் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலை எங்களுக்கு நேர்ந்தாலும் எங்களால் இதிலிருந்து பின் வாங்க இயலாது என்று அழுத்தமாகக் கூறி இருக்கிறார்.

மேலும் பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாகவும் அந்த அறக்கட்டளை தங்களுடைய பணியை மிகச் சிறப்பாக செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார் .விரைவில் அந்த அறக்கட்டளை தன்னுடைய பணிகளை விரைந்து முடித்து விடும் எனவும் கூறியிருக்கிறார்.