இனிமே ஓப்போ இல்லை! பைஜூஸ்! மாறப்போகும் இந்திய அணியின் ஜெர்சி! ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் Byju's என்ற நிறுவனத்தின் பெயரானது Oppo விற்கு பதிலாக மாற்றப்படவுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பொன்சராக  கடந்த 2017 ம் ஆண்டு  சீனாவை சேர்ந்த Oppo நிறுவனம் 1079 கோடி ருபாய் முதலீடு செய்து ஏலத்தில் வென்றது. இதன் காரணமாக இந்திய அணியின் ஜெர்ஸியில் Oppo நிறுவனத்தின் பிராண்ட் நேம் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடம் பெற்றுவந்தது.

5 வருடம் காண்ட்ராக்ட் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த ஸ்போன்சாரை  Oppo நிறுவனம் கைவிடுவதாக முடிவு செய்து, மீதமுள்ள இரண்டரை வருடங்களை பெங்களுருவை சேர்ந்த கல்வி சார்ந்த நிறுவனமான Byju's நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடரில் இந்திய அணியின் ஜெர்ஸியில் Byju's நிறுவனத்தின் பெயர் இடம் பெரும்.

செப்டம்பர் 2019ம் ஆண்டு முதல் மார்ச் 2022 வரை காண்ட்ராக்ட் அடிப்படையில் Byju's நிறுவனத்தின் பெயர் இந்திய அணியின் ஜெர்ஸியில் இடம் பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.