என் பொண்டாட்டி கூட நீ ஏன்டா படுத்து இருக்க? கையும் களவுமாக பிடித்த கணவன்! பண்ணை வீட்டில் உல்லாசமாக இருந்த கோவை தொழில் அதிபருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்!

நடன அழகியுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.


கோவையை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் விநோத்குமாருக்கும் திருப்பூரை சேர்ந்த நடன அழகி சுதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு வினோத்குமாரும், நடன அழகியும் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள பூவளப்பருதி என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை ஒரு கும்பல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் அவர்களுடைய சமாச்சாரம் முடிந்தவுடன் 5 பேர் கொண்ட கும்பல் பண்ணை வீட்டில் புகுந்து வினோத்குமாரை தாக்கி 5 சவரன் நகை, ஏடிஎம் கார்டு மற்றும் அவரது சொகுசு காரை அந்த கும்பல் பறித்துள்ளது. வினோத்குமாரையும், சுதாவையும் காரில் கடத்தி கொண்டு சென்ற கும்பல், பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் வினோத் குமாரை மட்டும் இறக்கி விட்டுள்ளது.

சுதாவை இறக்கி விடவில்லை. அப்போதுதான் அவருக்கு சுதாவும் அந்த கொள்ளைக் கூட்டத்தில் ஒரு பெண் என தெரியவந்துள்ளது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், தரவில்லை என்றால் சுதாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர். போலீஸ் ஆலோசனைப்படி பணம் தருவது போல் சென்றார் வினோத்குமார். தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதிக்கு கொள்ளை கும்பல் வந்தபோது அவரை மறைந்திருந்த ஆழியாறு போலீசார், செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான சதீஷ், கமல், அஜய் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். மேலும் நடன அழகி சுதாவையும் கைது செய்தனர்.