பெங்களூர் போறேன்னு சொன்னார்! ஆனால்..! கோவை ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு திருப்பூர் தொழிலதிபர் செய்த காரியம்!

பின்னலாடை நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த காரணத்தினால் பிரபல தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பூரிலுள்ள வேலம்பாளையம் எனும் இடத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவர் திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த பிரபல பின்னலாடை நிறுவன உரிமையாளரின் மகளுடன் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதியினருக்கு தற்போது ஒரு கை குழந்தையும் உள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த வாரம் தொடங்கியதிலிருந்தே திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் மூலம் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டமடைய தொடங்கியுள்ளது. இதனால் சூரியபிரகாஷ் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளானார். 

மாறுதலுக்காக பெங்களூரு சென்று வருவதாக கூறிவிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். 6-வது மாடியிலிருந்து இவர் திடீரென்று ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தால் காணப்பட்ட சூரியபிரகாஷ் தொழில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.