தேடி வந்த இளைஞர்கள்! பண மழை பெய்ய வைத்த தொழில் அதிபர்! அசர வைக்கும் காரணம்!

கருத்தரங்கில் பேசிய நபர் பண மழை பொழிந்த சம்பவமானது ரஷ்ய நாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டில் மக்னிடோகொர்ஸ்க் என்ற நகர் அமைந்துள்ளது. இந்நகரத்தில் டெக்னோநிகோர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. மேற்கூரை போடுவதற்கான பொருட்களை இந்த நிறுவனமானது உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஐகோர் ரைபேகோவ் என்பவர் பணியாற்றி வருகின்றனர்.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் ஐகோர் ரைபேகோவ் உரையாற்றினார். அந்த உறவின் போது தன்னுடைய தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தை பற்றி அவர் கூறினார். அதாவது அவளுடைய தந்தையின் பெயர் விளாடிமிர் என்றும் பொறியாளராக பணியாற்றி வந்தார் என்றும், அவர் 1 டாலர் பணத்தை அளித்து அதனைப் பெருக்கி கொள்ளுமாறு தனக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார். அந்த ஒரு டாலர் பணத்தை வைத்து தான் இன்று ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக முயன்று வருவதாக கூறினார்.

என் தந்தையை போன்று இந்தத் தொழில் முனைவோர் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பல டாலர்களை அளிக்க விரும்புகிறேன் என்று கூறி கவுண்டவுன் தொடங்கினார். அந்த கவுண்டவுன் முடிந்தவுடன் தன்னிடமிருந்த 20 ஆயிரம் டாலர் பணத்தை மேற்கூரையிலருந்து பறக்க விட்டார். அந்த கருத்தரங்கில் அவர் பேசியதற்காக 20 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது. 

அவர் மேற்கூரையிலிருந்து பறக்கவிட்ட பணத்தை கருத்தரங்கில் பங்கேற்றோர் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர். இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.